» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரையைக் கடந்தது மாண்டஸ் புயல்: பெரியளவில் பாதிப்புகள் இல்லை - அமைச்சர் பேட்டி
சனி 10, டிசம்பர் 2022 11:05:40 AM (IST)

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.
நேற்றிரவு 9.30 மணியளவில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகாலை 3 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும்போது 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 400 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது, "மாண்டஸ் புயலை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அரசு சிறப்பாக எதிர்கொண்டது. சுமார் 400 மரங்கள் முறிந்து விழுந்தன.
அவற்றை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கவில்லை. 16 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டில் உள்ளன. சைதாப்பேட்டையில் வீடு இடிந்துவிழுந்த நிகழ்வில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். அதுதவிர தலைநகரில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை" என்றார்.
இன்று 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: புயல் கரையைக் கடந்தாலும் கூட மழை நீடிப்பதால் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது
சனி 4, பிப்ரவரி 2023 5:41:07 PM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

வாணிஜெயராம் மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதல்வர் இரங்கல்!
சனி 4, பிப்ரவரி 2023 5:19:33 PM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 4:56:52 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)
