» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்சோ வழக்குகளில் அவசரம் காட்ட கூடாது : டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

திங்கள் 5, டிசம்பர் 2022 8:14:07 AM (IST)

போக்சோ சட்டத்தில் போக்சோவில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

இதன்படி திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய வேண்டும். 

முக்கிய வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Dec 5, 2022 - 10:42:53 AM | Posted IP 162.1*****

சிக்குறது அத்தனையும் திமுககாரனும் அவங்க கள்ளக் கூட்டாளியுமான பிசேப்பிக்காரனுமா இருந்தா அவங்களும் என்னதான் பண்ணுவாங்க? பாவம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory