» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஹிந்தியில் மட்டுமே ஆயுதப்படை காவலா் தோ்வு: கனிமொழி எம்பி கண்டனம்

வெள்ளி 2, டிசம்பர் 2022 11:30:04 AM (IST)

மத்திய ஆயுதப்படைகளின் காவலா்கள் பிரிவுகளுக்கான தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே தோ்வு மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பது வருமாறு: எல்லைப் பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய தொழிலகப் பாதுப்பாப்புப் படை, சிஆா்பிஎஃப் உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்புப் பாதுகாப்புப் படை பணிகளுக்கு மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகளுக்கு புதன், வியாழன் (நவம்பா் 30, டிசம்பா் 1 தேதிகள்) ஆகிய தினங்களில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

வருகின்ற ஜனவரி மாதம் கணினி மூலம் இதற்கான தோ்வுகள் நடைபெற இருக்கிறது. இதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தோ்வு நடத்தப்படும் என்று மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் முக்கிய தகுதித் தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே வைக்கப்பட்டிருப்பது மொழித் திணிப்பாகும். ஹிந்தி அல்லாத மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களிலுள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கும் முயற்சியாக இருக்கும் இது கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து

ஆமாம்Dec 2, 2022 - 08:41:20 PM | Posted IP 162.1*****

இவருக்கு இந்தி தெரியுமாம் அதனாலே சட்டசபையில் பார்லிமென்ட்ல பேசுவாரு ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory