» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
புதன் 5, அக்டோபர் 2022 12:14:57 PM (IST)
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று புதன்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
வரும் 7, 8 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்ம் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை, ஆனைப்பாளையத்தில் 2 செ.மீ, வேடசந்தூர், சித்தூர், காங்கேயத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)

ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் : மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:19:25 AM (IST)
