» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பூ வியாபாரி வெட்டிக்கொலை: பார் உரிமையாளர் -மகன் உட்பட 7பேர் கும்பல் வெறிச்செயல்!

புதன் 5, அக்டோபர் 2022 10:31:07 AM (IST)

கயத்தாறு அருகே பூ வியாபாரியை வெட்டிக் கொன்றதாக பார் உரிமையாளர் அவரது மகன் மகன் உட்பட 7பேர் கும்பல் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் அழகுதுரை (35). பூ வியாபாரி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அழகுதுரை நேற்று தனது உறவினருடன் கயத்தாறு மஞ்சநம்பிகிணற்று பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மதுக்குடிக்க சென்றனர். அப்போது அழகுதுரைக்கும் அவரது உறவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனை பார் உரிமையாளரான கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே நேற்று இரவு மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா மற்றும் உறவினர்கள் 5பேர் சேர்ந்து அழகுதுரை வீட்டிற்கு சென்று எப்படி எங்கள் பாரில் வந்து தகராறு செய்யலாம் என கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 7 பேரும் சேர்ந்து அழகுதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 

இதில் பலத்த காயமடைந்த அழகுதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 7 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். கொலை குறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக கனகராஜ், பட்டுராஜ், பால்பாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory