» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லோடு ஆட்டோ மீது லாரி மோதல்: 8 மாத குழந்தை, பெண் பலி ‍ 17 பேர் படுகாயம்!

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 11:32:51 AM (IST)

கோவில்பட்டி அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் 8 மாத ஆண் குழந்தை மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). இவரது மனைவி முத்துசெல்வி (37). இவர்களது மகன் தினேஷ் (16). விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடிவெள்ளி கொடையை முன்னிட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரன் தனது குடும்பத்தினர் மற்றும் அதே பகுதியில் உள்ள சிலருடன் லோடு ஆட்டோவில் நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

லோடு ஆட்டோவை புளியங்குடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். ஆட்டோ நள்ளிரவில் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அருகே உள்ள வளைவில் சென்ற போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த டிப்பர் லாரி லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த ராஜதுரை என்பவரது 8 மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மேலும் ரமேஷ் (29), வீரமணி (22), சமுத்திரவேல் மனைவி ராணி (39), இவரது மகள் விசுவாதினி (15), உயிரிழந்த கபிலேஷ் குமாரின் தாய் முகேஷ்பிரியா (23), மணிகண்டன் மனைவி கிருஷ்ண லீலாவதி, இவரது 2 வயது மகன் மதுரேஷன், மாடசாமி மகள் முக்தாஸ்ரீ (6), சிவா (18), பரமசிவன் (40), மாணிக்கம் (38), மனோஜ்(25), இனேஷ் (7), குமார் (47), டிரைவர் சுந்தரமூர்த்தி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முகேஷ் பிரியா, கிருஷ்ணலீலாவதி, மனோஜ், இனேஷ், முக்தாஸ்ரீ, மதுரேஷன், ராணி ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணாலீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த டிரைவர் சிவராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory