» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

வியாழன் 19, மே 2022 10:53:49 AM (IST)

சிதம்பரம் நடராஜா் கோவிலில் கனகசபை மீதேறி பக்தா்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கடலூர், கடலூர் மாவட்டம் , சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

நடராஜா் கோவிலில் கனகசபை மீதுஏறி வழிபட அனுமதி அளிக்குமாறு பக்தா்கள் பலா் கோாிக்கை விடுத்தனா். இந்த நிலையில், சிதம்பரம் நடராஜா் கோவிலில் கனகசபை மீதேறி பக்தா்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory