» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மேயர் என்.பி.ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா : திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

வியாழன் 3, மார்ச் 2022 3:25:55 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு என்.பி.ஜெகன், துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்,

தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்- துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. 

இதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு என்.பி.ஜெகன், துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ் போட்டியிடுகிறார்கள்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பி.எம். சரவணன், துணை மேயர் பதவிக்கு கேர்.ஆர் ராஜூவும் போட்டியிடுகிறார்கள்.

நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மகேஷ்,  துணை மேயர் பதவிக்கு மேரி பிரின்சியும் போட்டியிடுகிறார்கள்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர் பிரியாவும், துணை மேயர் பதவிக்கு மு. மகேஷ் குமார் 

மதுரை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு இந்திராணி

திருச்சி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மு.அன்பழகன், துணை மேயர் பதவிக்கு திவ்யா தனக்கோடி

கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கல்பனா, துணை மேயர் பதவிக்கு இரா. வெற்றிச்செல்வன்

சேலம் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு ஏ.இராமச்சந்திரன்

திருப்பூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தினேஷ் குமார்

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு நாகரத்தினம், துணை மேயர் பதவிக்கு செல்வராஜூ

ஆவடி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு ஜி. உதயகுமார், 

தாம்பரம் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் பதவிக்கு ஜி.காமராஜ், 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு மகாலட்சுமி யுவராஜ்,  வேலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் பதவிக்கு சுனில் 

கடலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சுந்தரி, 

தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சண்.இராமநாதன், துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி, 

கும்பகோணம் மாநகராட்சியில் துணை மேயர் பதவி தமிழழகன் 

கரூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கவிதா கணேசன், துணை மேயர் பதவிக்கு தாரணி பி.சரவணன் 

ஓசூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் பதவிக்கு சி.ஆனந்தைய்யா,

திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு இளமதி, துணை மேயர் பதவிக்கு இராஜப்பா, 

சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிக்கு சங்கீதா இன்பம், துணை மேயர் பதவிக்கு விக்னேஷ் பிரியா ஆகியோர் போட்டியிட உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory