» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 25, ஜனவரி 2022 10:43:14 AM (IST)
தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.அகவிலைப்படி உயா்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பதால், அரசு ஊழியா்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை ஊதியத்தில் உயா்வு ஏற்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயா்வுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியா்கள் சங்கங்கள், ஓய்வூதியதாரா் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை அதிகாரி சஸ்பெண்டு!
வியாழன் 19, மே 2022 4:22:50 PM (IST)

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 19, மே 2022 12:40:21 PM (IST)

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை: தட்டிக் கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி கைது!
வியாழன் 19, மே 2022 11:23:36 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் திடீர் சந்திப்பு : அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக பாராட்டு
வியாழன் 19, மே 2022 11:14:22 AM (IST)

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 19, மே 2022 10:53:49 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)
