» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளாவில் கரோனா பரவல் அதிகரிப்பு: புளியரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திங்கள் 24, ஜனவரி 2022 3:19:22 PM (IST)



கேரளாவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கேரளாவில் தற்போது கரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து தினமும் பணி நிமித்தமாகவும், வியாபார ரீதியாகவும் பொதுமக்கள் பலர் கேரளாவுக்கு சென்று வருகிறார்கள். கரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு  தென்காசி  மாவட்டம் வழியே செல்லும் பொதுமக்களுக்கு கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் கேரள சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே செல்ல அனுமதிக் கின்றனர்.

இதேபோல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் உள்ள தமிழக-கேரள எல்லை பகுதியில் தமிழக சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரளாவில் இருந்து வருபவர்களை தற்போது நடைமுறையில் உள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றுகள், உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்..  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புளியரை எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory