» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லையா? அறிவிப்பை ரத்து செய்த மின் வாரியம்!

வியாழன் 2, டிசம்பர் 2021 5:46:10 PM (IST)

கரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என்ற அறிவிப்பை மதுரை மண்டல மின் வாரியம் ரத்து செய்துள்ளது. 

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பலரும் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதற்காக  வருகிற டிச.7 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மண்டல மின்வாரிய சுற்றறிக்கையில் உத்தரவு வெளியாகியிருந்தது. 

அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிக்கையை ரத்து செய்வதாக மதுரை மண்டல மின்வாரியம் தெரிவித்திருக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory