» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் இராணுவ வீரர் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 2, டிசம்பர் 2021 3:22:05 PM (IST)

செங்கோட்டையில் முன்விரோதம் காரணமாக இராணுவ வீரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை  காலாங்கரையைச்  சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் விஜிமோன் என்பவரின் தங்க சங்கிலி தொலைந்தது சம்பந்தமாக செங்கோட்டை போலீசார் காலாங்கரை மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வந்த பரமசிவம் என்பவரை விசாரணை செய்தனர். இது சம்பந்தமாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 11.05.2015  அன்று பரமசிவம் என்பவரின் மகன் பண்டாரம் (27)  முன்னாள் இராணுவ வீரர் விஜிமோன் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

இது குறித்து செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பண்டாரத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனையும்,  ரூபாய் 4000  அபராதமும், அபராத ம் செலுத்த தவறினால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த செங்கோட்டை காவல் துறையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ்  பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory