» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் தொகுப்பு பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து : தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

வியாழன் 2, டிசம்பர் 2021 12:23:13 PM (IST)

தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தில் ஆரம்பம் முதலே சித்திரை 1-ம் தேதியைதான் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட அறிவித்தது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு தோல்வியில் முடிந்ததை அடுத்து, அதிமுக ஆட்சியில் இருந்து மீண்டும் சித்திரை 1-ம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் தொகுப்பு பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என்று அச்சிடப்பட்டு பை வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதியை மாற்றும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

2011-ம் ஆண்டு முதல் மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்பதை அப்போதைய தமிழக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. ஆனால், இப்போது திமுக அரசு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப்போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து குழப்பிக் கொண்டிருக்கிறது என கூறினார்.


மக்கள் கருத்து

kumarDec 2, 2021 - 01:02:29 PM | Posted IP 162.1*****

thanmana thamilanuku chithirai ondruthan puththandu....en panpadu, kalacharathai matra yarukum athigaram illai...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory