» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது: தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உத்தரவு

புதன் 24, நவம்பர் 2021 3:17:57 PM (IST)

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும் அதனை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்நிலையில் அரசின் இந்த சட்டத்திற்கு எதிராகவும் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்களான தீபா, தீபக் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியது.  

அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று கூறியதுடன், ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவி மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், 'வேதா இல்லம், மெரினாவில் பீனிக்ஸ் நினைவிடம் என ஜெயலலிதாவுக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பினர். மேலும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ 67.95 கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory