» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் சட்ட விரோதமாக பாலியல் தொழில்: 63 மசாஜ் சென்டர்களுக்கு சீல்!

செவ்வாய் 23, நவம்பர் 2021 11:59:16 AM (IST)

சென்னையில் பாலியல் தொழில் நடத்திய 43 மசாஜ் சென்டர்கள் உட்பட 63 மசாஜ் சென்டர்களுக்கு காவல்துறை சீல் வைத்துள்ளது. 

சென்னையில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக அனைத்து சென்டர்களிலும் சோதனை நடத்தினர் கீழ்ப்பாக்கம், தி நகர், அண்ணா நகர்,வடபழனி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தியதில் 63 மசாஜ் சென்டர்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது

இதனை அடுத்து அந்த 63 மசாஜ் சென்டர்கள் காவல்துறையினர் மூடி சீல் வைத்தனர். மேலும் இதில் 43 மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory