» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் தங்கள் உயிரை பாதுகாக்க துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக்கூடாது: டி.ஜி.பி.
செவ்வாய் 23, நவம்பர் 2021 11:37:03 AM (IST)
போலீசார் தங்கள் உயிரை பாதுகாக்க துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக்கூடாது என டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், பூமிநாதனின் மனைவி மற்றும் மகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது;-"வீர மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு காவல்துறை வீர வணக்கம் செலுத்துகிறது. அவரது இழப்பு பெரிய இழப்பாகும்.
பூமிநாதன் ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் பதக்கம் வாங்கியவர். தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற சிறந்த வீரர். கடமை உணர்வுடன், வீரத்துடனும், விவேகத்துடனும் வேலைப்பார்த்தவர். ஆடு திருடும் கும்பல் தானே என்று அவர் சாதாரணமாக விட்டுவிடவில்லை. 15 கி.மீ., தூரம் துரத்திச் சென்று மூன்று பேரையும் மடக்கி பிடித்து, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளார். மேலும், குற்றவாளிகளின் பெற்றோருக்கு போன் செய்து அவர்கள் செய்த குற்றத்தை தெரிவித்து அறிவுரையும் வழங்கி உள்ளார். சட்ட விதிப்படி அவர் நடந்து கொண்டுள்ளார்.
ஆனால், அந்த நபர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு பூமிநாதனை கொலை செய்துள்ளனர். காவல்துறை மீதான தாக்குதல் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். அதனால், ரோந்துப் பணியின் போதோ அல்லது தனியாக செல்லும் போதோ 6 தோட்டாக்களுடன் துப்பாக்கியை எடுத்துச்செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். சட்டப்படி போலீசார் தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்கக் கூடாது. வீடியோ உள்பட 100சதவீத ஆதாரம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
