» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விமானப் படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திங்கள் 22, நவம்பர் 2021 5:00:37 PM (IST)‘வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் போர் விமானத்தை கடந்த 2019ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியதற்காக கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்தார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory