» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆடு திருடர்களை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ வெட்டிக் கொலை: திருச்சியில் பயங்கரம்!
ஞாயிறு 21, நவம்பர் 2021 12:13:58 PM (IST)
திருச்சி அருகே ஆடுத் திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்ஐ வெட்டிக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர். ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட எஸ்ஐ பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றார்.
அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது ஓரு டூவீலரை தடுத்து நிறுத்திய எஸ்ஐ பூமிநாதன் அதில் இருந்த 2 திருடர்களை பிடித்தார். இதனைத் தெரிந்து கொண்ட மற்ற 2 டூவீலர்களில் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது சகாவை விடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் பூமிநாதன் முடியாது என கூற அவர்கள் வைத்திருந்த அரிவாளல் வெட்டினர். படுகாயமடைந்த எஸ்ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அவ்வழியாக நபர்கள் மூலம் தெரியவந்தது. ஆடுத்திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்ஐ வெட்டிக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
