» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி: அரசாணை வெளியீடு

சனி 20, நவம்பர் 2021 9:57:42 AM (IST)

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர் களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், திரையரங்குகள், மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மNov 20, 2021 - 06:49:47 PM | Posted IP 108.1*****

இப்படி சட்டம் கொண்டுவந்த எல்லா அரசியல்வாதிகளும் கூட முட்டாள்

ராமநாதபூபதிNov 20, 2021 - 02:37:22 PM | Posted IP 173.2*****

அதை எப்படி செக் பண்ணுவீங்க ஆபீஸர்ஸ்? ஊசி போட்ட சான்றிதழை கையிலே கொண்டு செல்லவேண்டுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory