» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் திருடிய சிறுவனுக்கு புது செல்போன் வாங்கி தந்த காவலர்

திங்கள் 21, செப்டம்பர் 2020 4:21:27 PM (IST)

ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் திருடிய 13 வயது சிறுவனை தண்டிக்காமல் காவலர் ஒருவர் அவனுக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த அந்த 13 வயது சிறுவனின் தந்தை பிஸ்கட் கடையில் வேலை பார்க்கிறார். தாயார் வீட்டு வேலை செய்பவர். அவர்களின் ஏழ்மை நிலையால் தங்கள் மகனுக்கு செல்போன் வாங்க காசில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அந்த சிறுவனிடம் ஏற்கெனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் ஆசை காட்டியுள்ளனர்.அவனுக்கு மொபைல் போன் கிடைக்கும் என கூறி தங்கள் திருட்டு வேலையில் அவனை உடந்தையாக்கியுள்ளனர். 

மேலும் அந்த சிறுவனை பயன்படுத்தினால் தங்கள் மீது சந்தேகம் வராது. அந்த சிறுவனுக்காக தங்களை விட்டு விடுவார்கள் என்றும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.ஆனால் செல்போன் திருடும் போது அந்த சிறுவனும் அவனை திருட்டு தொழிலில் தள்ளிய அந்த 2 குற்றவாளிகளும் சிக்கி கொண்டனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது சிறுவனின் நிலை தெரியவந்தது. பின்னர் அந்த சிறுவனுக்கு காவல்துறையை சேர்ந்த ஒருவர் தன் சொந்த செலவில் புதிய செல்போன் வாங்கி பரிசளித்தார். இதனால் அந்த சிறுவன் தவறானவர்களிடம் சிக்கி கொள்ளாமல் தன் கல்வியை தொடர வழிவகை செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory