» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் சம்பவத்தை எதிா்க்கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது : பாஜக மாநிலத் தலைவா் கருத்து!

வியாழன் 2, ஜூலை 2020 12:13:04 PM (IST)

"சாத்தான்குளம் சம்பவத்தை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது" என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.

திருப்பூரில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நேற்ற நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். 

இந்த சம்பவத்தில் தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதையும், சிபிஐ விசாரணை கோரியுள்ளதையும் வரவேற்கிறோம். ஆனால் இந்த சம்பவத்தை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது என்றாா். பாஜக மாநில பொதுச்செயலாளா் வானதி சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளா் பாயிண்ட் மணி, மாவட்டத் தலைவா் செந்தில்வேல், முன்னாள் மாவட்டத் தலைவா் சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory