» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வார்டில் இளம்பெண் டிக்டாக் வீடியோ: மருத்துவமனை ஊழியர்கள் 3பேர் டிஸ்மிஸ்!

செவ்வாய் 31, மார்ச் 2020 12:07:31 PM (IST)

அரியலூரில் கரோனா வார்டில் சிகிச்சை பெறும் இளம்பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் அவர், கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20-ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக டெஸ்ட் செய்து பார்த்ததில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, அதனால் அப்பெண்ணை கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்தபடியே இருந்தனர். இந்த பெண்ணுக்கு தொற்று என்பதால் இவரது உறவினர்கள் 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ஆனால் அவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் விடுவிக்கவும் பட்டனர். அதனால் கரோனா பாதித்த இளம்பெண் மட்டும் சிகிச்சையில் உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை மருத்துவமனையில் உள்ள நர்ஸ்களிடம் காட்டி கொண்டிருந்தார், இவர்களை தவிர , ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடமும் அந்த வீடியோவை செல்போனில் காட்டி உள்ளார். 

இப்படி 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்துவிட்டனர், அதுமட்டுமல்ல, கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் அந்த 3 பேரையும் கரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். கரோனா வார்டில் சிகிச்சை பெறும் இளம்பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட  விவகாரம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory