» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? : கமல்ஹாசன் கேள்வி

திங்கள் 30, மார்ச் 2020 3:50:00 PM (IST)

போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் மருத்துவ ஊழியர்கள் குரல் கொடுப்பதை அரசு கேட்க வேண்டும். போருக்கு ஆயுதம் இல்லாமல் வீரர்களை அனுப்புவது நியாயமா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக பொது சுகாதாரத்துறையும் மற்ற துறைகளும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அரசின் செயல்பாடுகளில் சில குறைகள் இருந்தாலும் நிறைகளே அதிகம் எனப் பலரும் பாராட்டுகின்றனர்.  இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள், சோதனை செய்யும் கிட்கள், உடைகள் பற்றாக்குறை உள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து அதைக் குறிப்பிட்டு இன்று ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை கமல் பதிவிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவு: "போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்குச் செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்தக் கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்”. என்று கமல் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில்  மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பாராட்டி கமல்ஹாசன் பதிவிடுகிறார்.

அவரது முந்தைய பதிவு: "மனித இனத்திற்கு எதிரான இந்த கரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல் பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கென பாராமல் பிறர்க்காக போராடும் உங்களின் சேவையால்தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது”. அதே நேரம் அமைச்சர் விஜயபாஸ்கரை டேக் செய்து சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், "வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது”. எனக் குறிப்பிட்டு செய்யும் பணிகள் போதாது என மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory