» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துபாயிலிருந்து நெல்லை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திங்கள் 23, மார்ச் 2020 1:19:02 PM (IST)

துபாயிலிருந்து நெல்லை வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் உலகையே கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 17 ம் தேதி துபாயிலிருந்து நெல்லை வந்த ஒருவர்  கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு காெரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து அரசு அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர் சென்று வந்த இடங்கள் அவர் குடியிருக்கும் தெரு ஆகிய இடங்களில் சென்று சோதனை செய்து வருகின்றனர். அவரால் மேலும் யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory