» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோ நீக்கம்: டுவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை

ஞாயிறு 22, மார்ச் 2020 4:59:25 PM (IST)

கரோனா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது. இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது  மக்கள் உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்  ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி நேரம் கரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். என பேசியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி பதிவிட்ட வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஏனெனில் ‘மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி நேரம் கரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது மக்கள் அதை உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக ரஜினி கூறிய கருத்துகள் ஆதாரமற்றதாக இருப்பதால் அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory