» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிறு 22, மார்ச் 2020 4:55:12 PM (IST)

தமிழகத்தில் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர். 

நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 9 மணிக்கு நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory