» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை : போலீஸார் விசாரணை

ஞாயிறு 22, மார்ச் 2020 9:49:50 AM (IST)

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் இவர், குடும்பத்தினருடன் கடலூரில் தங்கி உள்ளார். நாடியம் கிராமத்தில் உள்ள ஆட்சியரின் வீட்டின் காவலுக்காக அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவர் அங்கு தங்கி உள்ளார். நேற்று காலை செல்வம் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி ஆகியவை கழற்றப்பட்டு வீட்டின் பின் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், இது குறித்து ஆட்சியர் அன்புச்செல்வனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. தடயவியல் நிபுணர்கள் துணை சூப்பிரண்டு கலை கண்ணகி தலைமையில் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.போலீசார் தங்களை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டில் பெருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கணினியை கழற்றி தண்ணீர் தொட்டியில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.ஆட்சியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory