» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 6 பேர் பலி - 4பேர் படுகாயம்

வெள்ளி 20, மார்ச் 2020 5:03:21 PM (IST)

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

விருதுநகர் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சிப்பி பாறை என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில்  6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூரில் இருந்து  சென்ற தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால்  மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory