» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர்,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 9:49:53 AM (IST)

தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை கண்காணிக்க  6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன்,  தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory