» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விருதுநகரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது

சனி 18, ஜனவரி 2020 8:42:19 PM (IST)

விருதுநகரில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.

ராஜபாளையம் சங்கர பாண்டியாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் கடந்த 7-ந் தேதி அழுகிய நிலையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பிணமாகக் கிடந்த பெண்ணின் கழுத்தில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது தெரியவந்தது.

அந்தப் பெண் கழுத்தில் தாலி கிடந்ததால் திருமணமானவர் என கருதிய போலீசார் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். இதில் பிணமாகக் கிடந்தவர் சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (29) என தெரியவந்தது. இவரைக் கணவர் குணசேகரன் (36) கொலை செய்திருப்பார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கேரளா மூணாறு எஸ்டேட்டில் வேலை பார்த்த குணசேகரன் அங்கு ஒரு பெண்ணுடன் பழகி குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இது பழனியம்மாளுக்கு தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, சம்பவத்தன்று ஊருக்கு வந்த குணசேகரன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவி பழனியம்மாளுடன் தகராறு செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் மாயமான நிலையில், பழனியம்மாள் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். எனவே அவரை குணசேகரன்தான் கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் கருதினர். அவரைத் தேடி தனிப் படையினர் மூணாறு சென்றனர். ஆனால், அங்கு குணசேகரன் இல்லை.

இதனால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொல்லத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் அவர் வேலை பார்ப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர், குணசேகரனைக் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மனைவி பழனியம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்ததையும் உடலை சுடுகாட்டு முட்புதரில் வீசியதையும் குணசேகரன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

அருண்Jan 19, 2020 - 11:32:24 AM | Posted IP 108.1*****

அடேய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory