» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகம் முழுவதும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 10:09:44 AM (IST)
தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.லாரிகள் சிறைப்பிடிப்பு, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவது ஆகியவற்றைக் கண்டித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
செவ்வாய் 26, ஜனவரி 2021 10:31:37 PM (IST)

விவசாய சேவைகளைப் பாராட்டி 105 வயது பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது : கனிமொழி வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:16:14 PM (IST)

மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:11:16 PM (IST)

கோவில்பட்டி - கடம்பூர் இரட்டைப் பாதை பணிகள் பிப்ரவரி மாதம் நிறைவு பெறும்: ரயில்வே அதிகாரி
செவ்வாய் 26, ஜனவரி 2021 11:24:53 AM (IST)

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குநா் பாலா நீதிமன்றத்தில் ஆஜா்
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:43:13 AM (IST)

மு.க.ஸ்டாலினிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:15:34 AM (IST)
