» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 5ஆவது முறையாக நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய் 25, ஜூன் 2019 5:24:22 PM (IST)

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 -ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த நவம்பர் 22 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார். முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் கடந்த 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, அதாவது 2018  ஜூன் 24  வரை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.கடந்த 2018  ஜூன் 25 -ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலம் இரண்டாம் முறை 4 மாதங்களுக்கும், இதையடுத்து, மூன்றாம் முறையாக கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து 2019 பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ  மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆணையமும்,  சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் ஆணையத்தின் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. ஆணையத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்று,  பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து 4 மாதங்கள் அதாவது வரும் ஜூன் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து

ஆசீர். விJun 26, 2019 - 01:57:38 PM | Posted IP 162.1*****

ஓபிஸ் கடைசிவரை விசாரணைக்கு ஆஜராகவே இல்லை. ஒரு வாரண்ட் பிறப்பித்து பாருங்கள். கடைசியில் அப்போல்லோவில் சாப்பிட்ட இட்லி தொண்டையில் சிக்கி இறந்தார் என்று சொல்லாமல் இருந்தால் சரி

ஒருவன்Jun 25, 2019 - 06:58:37 PM | Posted IP 173.2*****

இனி அடுத்து 100 ஆவது முறையாக விசாரிக்க வாழ்த்துக்கள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory