» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)
திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞரைக் கேரள மாநிலம் கொச்சியில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சகாய அரசு (27) என்பவருடன் தனக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கேரள மாநிலம் கொச்சியில் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் சகாய அரசைப் காவல்துறையினர் கைது செய்து நேற்று காலை நாகர்கோவிற்குக் கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட சகாய அரசுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


