» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியான சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி கடந்த 9-ஆம் தேதி தென்தாமரைகுளம் காவல்துறையினர் இவரைக் கைது செய்து, நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி சிறைக் காவலர்கள், கைதிகள் தாக்கியதில் சபரிவர்மன் பரிதாபமாக உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து நேசமணி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இக் காவலர்கள் மூவரும் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொலை வழக்கு தொடர்பாகத் தடவியல் நிபுணர்கள் நாகர்கோவில் சிறையில் ஆய்வு மேற்கொண்டு முக்கியத் தடயங்களைச் சேகரித்தனர். நேசமணி நகர் காவல்துறையினர் கைதிகளைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வழக்கில் வெளிப்படைத்தன்மை மற்றும் தீவிர விசாரணையை உறுதிசெய்யும் பொருட்டுச் சபரிவர்மன் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)


