» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மகளிர் விளையாட்டு விடுதியினைக் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய நோக்கமே பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்கிப் பயிற்சி அளிப்பதாகும். அதனடிப்படையில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் இம் மகளிர் விடுதியில் மதுரை, சென்னை, சேலம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 60 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
ஆய்வின் போது, இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் வசதிகள், பயிற்சிகள் மற்றும் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது. விடுதி சமையலறைக்குச் சென்று உணவின் தரம், மெனு விபரம் மற்றும் உணவுப் பொருட்கள் தூய்மையான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கப்பட்டது. வீராங்கனைகளுக்கு உடல் வலிமையும் ஆரோக்கியமும் மிக முக்கியம் என்பதால், வழங்கப்படும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுத்தமான முறையிலும் சமைக்கப்பட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வீராங்கனைகளின் பயிற்சிக்குத் தேவையான அனைத்து கூடுதல் வசதிகளும், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையமும் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையின் வாயிலாக உடனுக்குடன் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூட வசதிகள் குறித்துக் கேட்டறிந்த போது, வீராங்கனைகள் கூடுதலாகக் கழிப்பறை வசதி வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நடைபெற்று வரும் பணிகளுடன் கூடுதலாகக் கழிப்பறை அமைக்க மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.
விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே விளையாட்டுத் துறை இடஒதுக்கீட்டில் சாதிக்க முடியும் என்றும்; ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய போட்டிகள் மற்றும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, விடுதி காப்பாளர்கள், பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வீராங்கனைகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)


