» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவதை அந்தந்தத் துறை அலுவலர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி நகராட்சிப் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலைய முகப்பு, வடிவீஸ்வரம், தேர்மூடு ஆகிய பகுதிகளில் விளக்குகள் பழுதின்றி எரிகிறதா என்று பார்வையிட்டார். அப்போது அங்குப் பழுதடைந்து காணப்பட்ட தெருவிளக்குகளை உடனடியாகப் புதிய விளக்குகளாக மாற்றிட மாநகராட்சிப் பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட நகரின் முக்கியச் சந்திப்புகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்குப் பின் அவர் கூறுகையில், "மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்துள்ள மற்றும் எரியாத தெருவிளக்குகளை உடனடியாகக் கண்டறிந்து சீரமைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பில் எவ்விதத் தொய்வும் இருக்கக்கூடாது. இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமுமின்றி நடமாடும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகள் தடையின்றி எரிவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
இந்த ஆய்வின் போது நாகர்கோவில் மாநகராட்சிப் பொறியாளர் ரகுராம், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)


