» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)
இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கமாகவும், தியாகம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த கருத்துகளை நினைவூட்டுவதாகவும் விளங்கும் மொஹரம் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியச் சகோதரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மொஹரம் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கமாக விளங்கும் இந்த மொஹரம் திருநாள் தியாகம், உண்மை, நீதி மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த கருத்துகளை மனிதகுலத்திற்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த நன்னாள் தியாக உணர்வையும், அநீதிக்கு எதிராகத் துணிச்சலுடன் எழுந்து நிற்கும் மனப்பக்குவத்தையும் மனிதகுலத்திற்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மொஹரம் பண்டிகை நமக்கு ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறிய அவர், இந்த புனித நாளில் அமைதி, அன்பு மற்றும் வளம் அனைவரின் இல்லங்களிலும் நிலவட்டும் என்றும், நல்லிணக்கமும் மனிதநேயமும் நிறைந்த சமுதாயம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)


