» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் பறக்கும் படையினரின் வாகன சோதனை: ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தேரி மற்றும் ஒழுகினசேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர். அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் முறை, ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் சோதனையின் போது மேற்கொள்ளப்படும் வீடியோ பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். சோதனையில் கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்புழக்கம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகளைச் சரிபார்த்தார்.
பதிவேடுகளைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையற்ற இடையூறு ஏற்படாத வகையிலும், அதே சமயம் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் பணியைத் தொடர வேண்டும் என அங்கிருந்த காவல்துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். தேர்தல் நெருங்குவதையொட்டி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை: கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:47:33 PM (IST)

தேர்தல் விதிமீறல்கள் குறித்து எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:28:09 AM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி: வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்கு வந்தபோது சோகம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:23:50 AM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)

குமரியில் தேர்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிர்வாகிகள் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:24:39 PM (IST)

