» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

விளவங்கோடு அருகே வேன் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்த திபின் பென்சிகர் (20) என்பவர், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சிதறால் கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட திபின் பென்சிகர், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை காவல் நிலைய போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வேன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

