» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமையில் அருட்பொழிவு அபிஷேகம் செய்கிறார்.
சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி திருமண்டலத்தின் பேராயர் செல்லையா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து 7வது பேராயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 25ந் தேதி நடைபெற்றது. இதில் நெய்பூர் சேகர ஆயர் கிறிஸ்டோபர் விஜயன், மார்த்தாண்டம் சேகரம் காரவிளைஆயர் பிரேம் செல்வசிங், நெய்யூர் சேகரம் செம்பொன்விளை ஆயர் ராஜா ஜெயசிங், முட்டம் இறையியல் கல்லூரி தாளாளர் இராயப்பன் ஐசக் ஆகிய நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நால்வரிலிருந்துபுதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் சி.எஸ்.ஐ. சினாடு பேரவை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை சினாடு பேரவை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய பேராயருக்கான பதவியேற்பு விழா நாளை டிசம்பர் 7 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா ஆலயத்தில் வைத்து நடைபெற்றுகிறது.
அருட்பொழிவு ஆராதனையில் புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்ட ஆயர் கிறிஸ்டோபர் விஜயனுக்கு சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் ரூபன் மார்க் அருட்பொழிவு அபிஷேகம் செய்கிறார். இதில் சி.எஸ்.ஐ. பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா, பொருளாளர் விமல் சுகுமார், மற்றும் பேராயர்கள், திருமண்டல ஆயர்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

