» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிமைப்பணிகள் தொகுதி - 4 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடிமைப்பணிகள் தொகுதி IV தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (12.07.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி - IV பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது.
தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் 28,651 நபர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களில் கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், Mobile Unit, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
