» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளியலறையில் ரகசிய கேமரா: இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ கைது!
திங்கள் 19, மே 2025 12:43:02 PM (IST)
குமரி மாவட்டத்தில் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் திருமணமாகி கணவன், இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது உறவினரான வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மது ராஜா (35). இவர் மிசோரம் மாநிலத்தில் ராணுவ ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறையில் மது ராஜா வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வது வழக்கம். 2003-ல் அந்த பெண் புதிதாக வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார். இதற்கு அழைத்ததன் பேரில் சென்ற மது ராஜா புதிய வீட்டில் உள்ள குளியல் அறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தினார். பின் அவர் மிசோரம் மாநிலத்திற்கு பணிக்கு சென்றார்.
அங்கு இருந்தபடி அந்த பெண்ணின் வீட்டு குளியலறையில் இருந்த கேமரா மூலம் அலைபேசியில் அவர் குளிப்பதை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மது ராஜா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் அந்த படங்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதிர்ச்சி அடைந்த பெண் மது ராஜா மீது ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் மது ராஜா ரகசியமாக கேமரா பொருத்தியது தெரிந்தது. மது ராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)
