» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளிகளில் குழந்தை திருமணத்தடைச்சட்டம் விழிப்புணர்வு : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:25:54 AM (IST)



குமரி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் குழந்தை திருமணத் தடைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தை திருமணத்தடைச்சட்டம் -2006 தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தொடங்கி வைத்து தெரிவிக்கையில்-

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கடந்த 21.06.2024 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திற்குட்பட்ட 12,567 அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தை திருமணத் தடைச்சட்டம் 2006 தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அதனடிப்படையில் நமது மாவட்டத்திற்குட்பட்ட 76 அரசு உயர்நிலை பள்ளிகள், 60 அரசு மேல்நிலை பள்ளிகள், 78 தனியார் உயர்நிலை பள்ளிகள் மற்றும் 155 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 369 அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தை திருமணத்தடைச்சட்டம் 2006 தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் வழங்கப்படவுள்ளது.

அதன் ஒருபகுதியாக இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிக்கல்வி, நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் விழிப்புணர்வு பலகைகள் வழங்கி, அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு பலகைகளை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியருக்கு தெரியும்படி வெளிப்படையாக அமைக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்வாயிலாக இச்சட்டத்தினை குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவியரிடையே ஏற்பட ஒரு வாய்ப்பாக கருதலாம். இதன் மூலமாக ஆணின் திருமண வயது 21 பெண்ணின் திருமண வயது 18 என்பதனை மாணவ மாணவியருக்கு தெரிவிக்க இயலும். போக்சோ குறித்து பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக்அப்துல் காதர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்டசமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் பள்ளிக்கல்வி சாரதா, மாவட்ட கல்வி அலுவலர் (நாகர்கோவில்), மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்பள்ளிகள்), துணை காவல் கண்காணிப்பாளர் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) பாலாஜி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory