» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போப் ஆண்டவர் மறைவு :விஜய் வசந்த் எம்பி இரங்கல்.

திங்கள் 21, ஏப்ரல் 2025 7:43:48 PM (IST)

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையான போப் பிரான்சிஸ் மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கத்தோலிக்க சபையின் திருத்தந்தை போப்  பிரான்சிஸ் மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவின் மூலம் ஒரு சிறந்த ஆன்மீக தலைவரை இழந்து விட்டோம்.

ஏழைகளின் மீது அவர் கொண்ட பரிவும், சமுதாயத்தால் ஒதுக்கபட்டவர்கள் மீது அவர் பொழிந்த அன்பும் அவரது சிறந்த பண்புகள். அவரை இழந்து வருந்தும் உலகமெங்கும் உள்ள சபை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory