» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:14:17 PM (IST)
கன்னியாகுமரி அருகே திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த இளைஞர் அரவிந்த் (26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு அந்த சிறுமி அங்குள்ள வலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம் நைசாக பேசி அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடம் அருகே அழைத்து சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரவிந்தை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரவிந்த் நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)
