» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரப்பர் விவசாயிகளின் கோரிக்கைககளை நிறைவேற்ற நடவடிக்கை: ஆட்சியர் அழகுமீனா
வெள்ளி 6, டிசம்பர் 2024 4:53:11 PM (IST)

ரப்பர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு தெரிவிக்கையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டதில் மட்டுமே இரப்பர் பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அதிக மழைபொழிவு மற்றும் அதிக ஈரப்பதம் அதிக இரப்பர் மர பால் உற்பத்தியுடன் இரப்பர் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரப்பர் சாகுபடியின் மொத்த பரப்பளவு 29060 எக்டர் ஆகும்.
முக்கிய வட்டாரங்கள் மேல்புறம் (9580 எக்டர்), திருவட்டார் (9599 எக்டர்), தக்கலை (4901 எக்டர்) மற்றும் தோவாளை (1648 எக்டர்), கன்னியாகுமரி மாவட்டத்தில் இரப்பர் உற்பத்தி செய்யும் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 43415 ஆகும். அதில் 43374 சிறு மற்றும் குறு விவசாயிகள் 21681 எக்டர் பரப்பளவில் இரப்பர் உற்பத்தி செய்கின்றனர். சுமார் 41 பெரு விவசாயிகள் 7373 எக்டர் பதிவு செய்யப்பட்ட தோட்டங்களில் சாகுபடி செய்கின்றனர்.
இந்தியாவில் 6,40,000 டன்கள் உற்பத்தியுடன் இயற்கை ரப்பர் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தாய்லாந்து 26,15,000 டன்கள் உற்பத்தியுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து இந்தோனேஷியா 1,63.000 டன்கள் உற்பத்தியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் உற்பத்தியில் கேரளா 85 சதவிகிதமும் தமிழ்நாடு 4 சதவிகிதமும் திரிபுராவை தொடர்ந்து பங்களிக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரப்பர் பால் மற்றும் ரப்பர் சீட்டுகளை விற்பனை செய்யும் போது அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க ஆவன செய்யப்படும். மேலும் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்ற விவசாயிகள் முற்படும்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற கால தாமதம் ஏற்படுவதால் அதனை குறைத்து வழிமுறைகளை எளிமையாக்கி விரைவில் அனுமதி வழங்க வேண்டிய நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும். மேலும் ரப்பர் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ரப்பர் கழக நிர்வாக மேலாளர் எம்.வசந்தகேசன், ஐ.ஆர்எஸ், ரப்பர் உற்பத்தி இணை ஆணையர் சிஜூ, ரப்பர் உற்பத்தி கழக ஆணையர் சாலி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், ரப்பர் கழக அலுவலர்கள், ரப்பர் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


