» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி - தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில் : முன்பதிவு தொடங்கியது!

செவ்வாய் 29, அக்டோபர் 2024 8:18:59 AM (IST)

தீபாவளியை முன்னிட்டு, தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் இருந்து அக்.29 , நவ.4-இல் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06188) மறுநாள் காலை 10.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து அக்.30, நவ.5- ஆகிய தேதிகளில் பகல் 12.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இந்த நிலையில், தூத்துக்குடி-தாம்பரம் தீபாவளி  சிறப்பு ரயில்கள் முன்பதிவு துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று இச்சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கத்தின் செயலாளர்
மா. பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

RajanOct 30, 2024 - 05:56:03 AM | Posted IP 172.7*****

இதை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் 👍

ஹென்றிOct 29, 2024 - 09:25:50 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி முதல் சென்னை வரை நிரந்தரமாக முத்து நகர் விரைவு ரயில் இல்லாமல் கூடுதல் ஒரு ரயில் கண்டிப்பாக தேவை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory