» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் அக்.19ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வியாழன் 10, அக்டோபர் 2024 5:31:29 PM (IST)
நாகர்கோவிலில் வருகிற 19ஆம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் நாகர்கோவில் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 சனிக்கிழமை அன்று நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படிப்பு போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.10.2024 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே CONFIRMATION MAIL அனுப்பப்படும். Confirmation Mail பெறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும் எனவும், இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான TELEGRAM CHANNEL ல் DECGCNGL என்ற குழுவில் தங்களை இணைத்து கொள்ளுமாறும் மற்றும் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

