» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் : உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:42:29 PM (IST)

தேவைப்படும் பட்சத்தில் தாமிரபரணி ஆற்றில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2018 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள் மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்றம் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கலப்பதை கூட அனுமதிக்க மாட்டோம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர் அதிகாரிகளின் வீடுகளில் இருப்பது போல கழிவுநீர் சென்றால் பார்த்துக் கொண்டிருப்பார்களா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாநகராட்சி கமிஷனர் சார்பில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை முற்றிலும் தடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதற்கு மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அழகு மணி ஆஜராகி, நெல்லை மாநகராட்சியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் முழுவதும் தடுக்கப்பட வேண்டும் இதனை முன்மாதிரியாக கொண்டு மற்ற ஆறுகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்.
தாமிரபரணி ஆறு தொடக்கம் முதல் கடலில் கலக்கும் பகுதி வரை அதன் இருபுறமும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இந்த ஆற்றில் கலக்கும் கழிவு நீரை அவரவர் பகுதியில் தடுப்பதற்கான திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வக்கீல் அருள் நியமிக்கப்படுகிறார்.
மேலும் நெல்லை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் நாங்களே நேரில் வந்து தாமிரபரணி ஆறினை ஆய்வு செய்வோம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
