» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் விசாரணை நிறைவு : வழக்கு 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதன் 10, ஜூலை 2024 3:22:36 PM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 24ஆம் தேதிக்கு ஓத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இன்று வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதி ஐயப்பன் தலைமையில் வந்தது இன்று வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி தம்பிகள் மற்றும் ஒரு மகன் ஆஜராகாத நிலையில் இரண்டு மகன்களான ஆனந்த மகேஸ்வரன் மற்றும் ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது தொடர்பாக அரசு தரப்பு சாட்சியாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் சேர்க்கப்பட்டிருந்தார் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க மாவட்ட நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது
இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜரானார் அவரிடம் அரசு தரப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் நாகராஜ், மனோகரன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சேது ஆஜரானார். இதையடுத்து முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)


.gif)